• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

குழி கழிவறைகள்: கழிவறை இடிந்து மலக்குழியில் 3 மணிநேரம் சிக்கிய பெண் மீண்டது எப்படி?

Byadmin

Apr 24, 2026


ஆஸ்திரேலியாவின் கிராமப்புறப் பகுதியில் உள்ள ஒரு குழி கழிப்பறை அல்லது 'லாங்-டிராப்' கழிப்பறையின் கோப்புப் படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் கிராமப்புறப் பகுதியில் உள்ள ஒரு குழி கழிவறை (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியப் புறநகர்ப் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது கழிவறை இடைவேளைக்காக நின்ற பெண் ஒருவர், அந்தக் கழிவறை இடிந்து விழுந்ததில் கழிவுநீர்க் குழியில் இடுப்பளவு வரை சிக்கிக்கொண்டார்.

அவர் “சுமார் மூன்று மணிநேரம் கழிவுநீர்க் குழியில் சிக்கியிருந்தார், அங்கேயே தற்செயலாகக் கடந்து சென்ற உள்ளூர் தொழிலாளி ஒருவரால் அவர் மீட்கப்பட்டார்,” என்று வடக்கு பிரதேச (Northern Territory) அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்த அந்தப் பெண், டார்வினில் உள்ள உறவினர்களைச் சந்தித்துவிட்டு கான்பெராவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக ‘ஆக்‌ஷன் ஃபார் ஆலிஸ்’ சமூக முகநூல் பக்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட அந்த கழிவறை, ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் எனும் தொலைதூர நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 145 கி.மீ தொலைவில் உள்ள ஹென்பரி மீட்டியோரைட்ஸ் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது.

குழி கழிவறைகள்

குழி கழிவறைகள் என்பவை மனிதக் கழிவுகளை நிலத்தடியில் உள்ள ஆழமான குழியில் சேகரிக்கும் அடிப்படையான நீர் ஊற்றப்படாத கழிவறைகள் ஆகும். இவை மின்சார இணைப்பு இல்லாத தொலைதூர அல்லது கிராமப்புறங்களில் பொதுவாகக் காணப்படும்.

By admin