0
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்துக்கு ஒப்படைத்து அரசுக்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவெல கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.