• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

கொரில்லா: தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் இந்த குரங்குகள் – புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு உதவுமா?

Byadmin

Sep 13, 2024


சுய மருத்துவம் செய்யும்  கொரில்லா இனம் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் 150,000-க்கும் சற்று குறைவான `வெஸ்டர்ன் லோ லேண்ட்’ கொரில்லாக்கள் காடுகளில் வாழ்கின்றன.

கொரில்லா இனங்களிடம் காணப்படும் சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளும் போக்கு, எதிர்கால மருந்து கண்டுபிடிப்புக்கு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கபோன் நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் காட்டு கொரில்லா இனம் உட்கொள்ளும் வெப்பமண்டல தாவரங்களை ஆய்வு செய்தனர். இந்த தாவரங்கள் உள்ளூர் மூலிகை மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வின் முடிவில் நான்கு தாவரங்களில் மருத்துவ குணங்கள் இருப்பது இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த தாவரங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதாக ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஒரு தாவரம், சூப்பர்பக்ஸை (உடல்நல பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா. ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த முடியாது) எதிர்த்துப் போராடும் திறன் பெற்றிருந்தது.

By admin