• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

கோனேரு ஹம்பி – திவ்யா தேஷ்முக் இருவரில் மகளிர் செஸ் உலகக்கோப்பையை வெல்வது யார்? இந்திய செஸ் உலகில் புதிய வரலாறு

Byadmin

Jul 27, 2025


கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும்.

ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

கோனேரு ஹம்பி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர் தான்.

கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 2 வீராங்கனைகள் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். திவ்யா தேஷ்முக், இந்த தொடரில் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார்.

By admin