• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

“கோபுரத்தில் ஏற அனுமதிக்கவில்லை” – வல்லக்கோட்டை கோவிலில் செல்வப்பெருந்தகைக்கு நடந்தது என்ன?

Byadmin

Jul 9, 2025


செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர்

பட மூலாதாரம், K.Selvaperunthagai/FB

“வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்னை அனுமதிக்காததற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், “கோவிலுக்குள் சாதிரீதியாக எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை” எனக் கூறுகிறார், காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர்.

கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்ன நடந்தது? சர்ச்சையின் பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது ‘சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்’ என அறநிலையத் துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

By admin