• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

கோல் அடிக்காமல் ஆட்டத்தை வெல்லும் மெஸ்ஸியின் ரகசியம் என்ன?

Byadmin

Jul 16, 2026


அர்ஜென்டினா -

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அர்ஜென்டினா – தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி இன்னொரு கோப்பையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது நடப்பு சாம்பியன்.

85 நிமிடங்கள் வரை ஆட்டத்தில் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, தொடரிலிருந்து வெளியேறிவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் வெகுண்டெழுந்து 8 நிமிட இடைவெளியில் 2 கோல்கள் அடித்தது அந்த அணி.

முதல் பாதியில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்திடாத அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, கடைசி கட்டத்தில் அந்த அணியின் இரண்டு கோல்களுக்குமே அசிஸ்ட் செய்து தன் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறக் காரணமாக அமைந்தார்.

இந்த உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா அணி இதே பாணியில் வெற்றி பெறுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. எகிப்து அணிக்கெதிராக 2 கோல்கள் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து கடைசி கட்டத்தில் 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது அந்த அணி.

நாக் அவுட் சுற்றில் இப்படியான வெற்றிகள் அந்த அணிக்கு வாடிக்கையாகியிருக்கிறது என்ற நிலையில், இந்த வெற்றிகளில் மெஸ்ஸியின் ரோலுமே மாறியிருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் கோல் மெஷினாக விளங்கிக்கொண்டிருந்தவர், சமீபத்திய போட்டிகளில் அசிஸ்ட்கள் கொடுக்கும் ஒரு ‘கிரியேட்டராக’ மாறியிருக்கிறார்.

By admin