• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

குடும்ப சொத்து தகராறு: ரூ.150 கோடி நிலம் மற்றும் கடை பங்கீடு மோதலில் தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

Byadmin

Jul 16, 2026


உத்தர பிரதேசத்தில் 150 கோடி ரூபாய் குடும்ப சொத்து பிரச்சனையில் தனது தந்தையை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

காசியாபாத்தில் உள்ள மோடிநகர் அடுத்த புதானா கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஹரியாம் என்பவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், நிகில், நிஷூ என இரண்டு மகன்களும் உள்ளனர்.

ஹரியாமிற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே சொந்தமாக நிலமும், சந்தையில் சொந்தமாக மூன்று கடைகளும் உள்ளன. இதன் மதிப்பு ரூ.150 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாம் இந்த சொத்துக்களை மூன்று பங்காக பிரித்து, தனது மகன்களுக்கு இரண்டு பங்கும், தனது மனைவிக்கு ஒரு பங்குமாக மொத்தம் மூன்று பங்காக பிரித்துள்ளார்.

By admin