• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களைக் கடத்தி மிரட்டல் – கடத்தப்பட்டவர்களும் கைதானது ஏன்?

Byadmin

Jun 13, 2026


கோவை ஆட்கடத்தல் வழக்கு, குற்றம், காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இருவரைக் கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் பணம் வாங்கிய 4 நபர்களை காவல்துறை தனிப்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தபோது, அவர்களில் இருவர் போலீசார் என்பது தெரியவந்தது.

அவர்கள் 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்; இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு திருப்பமாக, பணம் கேட்டு கடத்தப்பட்ட இருவர் மீதும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்னும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

‘ஆட்களைக் கடத்தியது தெரியாமல், பணத்தை வாங்கி வைக்குமாறு தங்களது தம்பி கூறியதைக் கேட்டு, பணம் வாங்கவந்தபோது போலீசார் இருவரும் சிக்கிக்கொண்டதாக’ காவல் ஆய்வாளர் அசோக் குமார் தெரிவித்தார். கடத்தல் பற்றி தெரியாது என்றாலும் பணத்தை வாங்கியதால் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் பிபிசியிடம் தெரிவித்தார்.

‘போலீஸ் விசாரணைக்கு அழைப்பது போல ஆளைக் கடத்திய கும்பல்’

கோவை ஆட்கடத்தல் வழக்கு, குற்றம், காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கோவை அருகிலுள்ள வெள்ளலூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பரமேஸ்வரி, கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று அதிகாலையில் போத்தனூர் காவல் நிலையத்தில் வந்து ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய உடன்பிறந்த தம்பி நவீன் (வயது 29) மற்றும் அவருடைய நண்பர் நிர்மல்குமார் இருவரையும் சிலர் கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்பேரில் அன்று காலையிலேயே உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

By admin