• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

கோவை: நிர்மலா சீதாராமன் உடனான கோவை ஓட்டல் உரிமையாளர் சந்திப்பின் போது நடந்தது என்ன?- வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம்

Byadmin

Sep 14, 2024


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் செப்டெம்பர் 11-ஆம் தேதி நடந்த தொழில் அமைப்பினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார். அவர்களது கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சிலர் அவரோடு பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சீனிவாசனும் பேசினார்.

கோவையில் உணவகச் சங்கிலியையும் நடத்தி வரும் அவர் பேசும்போது, ”ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதால் கம்ப்யூட்டர் குழம்புகிறது, வாடிக்கையாளர்கள் அதிருப்தியாகிறார்கள், வரி விதிக்கும் அதிகாரிகளும் திணறுகிறார்கள்” என்று சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்தக் கருத்து, சில மணி நேரங்களில், சமூக ஊடகங்களில் ‘வைரல்’-ஆக பரவியது.

அந்த வீடியோ, ஆயிரக்கணக்கான மக்களால் பகிரப்பட்டு, தொழில் துறையினரிடம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளானது.

By admin