• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

கோவை வெள்ளலூர்: ரோமானியர்களின் வணிக மையமாக திகழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள்

Byadmin

Jul 22, 2026


ரோமானிய நாணயம், கோவை, வெள்ளலூர், அகழ்வாராய்ச்சி

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஏற்கெனவே வெள்ளலூரில் ஆயிரத்துக்கும் அதிகமான ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன.

மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை இணைத்த வணிகப்பாதையான ராசகேசரிப் பெருவழியில் அமைந்திருந்ததால் வெள்ளலூர் வணிக மையமாகத் திகழ்ந்ததை, இங்கே கிடைத்துள்ள பொருட்கள் உறுதி செய்திருப்பதாக தொல்லியல் அலுவலர் சுரேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெள்ளலூரில் கிடைத்த கல்மணிகள், காங்கேயத்தில் இயற்கையாகக் கிடைத்த கல்லில் கொடுமணலில் செய்யப்பட்டவை என்று கூறுகிறார் மூத்த தொல்லியல் ஆய்வாளரும், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இணை இயக்குநருமான பூங்குன்றன்.

வேறு எங்கும் கிடைக்காத அளவுக்கு வெள்ளலூரில் ரோமானிய நாணயங்கள் கிடைத்திருப்பதால், ரோமானியர்கள் வணிகம் செய்ய வந்தபோது அங்கு தங்கியிருக்க குடியிருப்பு அமைத்திருந்திருக்கலாம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன்.

By admin