• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

சக பணியாளருடன் காதலா? இந்த விஷயங்களை மறந்துவிட்டால் வேலையே காலி!

Byadmin

Jul 27, 2025


கோல்ட்பிளே, ஆஸ்ட்ரோனமர்

பட மூலாதாரம், Getty Images/BBC

படக்குறிப்பு, பல நிறுவனங்களில், மேலாளருக்கும் அவருக்குக் கீழ் பணிபுரிபவருக்குமான உறவு அனுமதிக்கப்படுவதில்லை

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ‘அஸ்ட்ரோனமர்’, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழில்முறை காரணத்திற்காக அல்லாமல், தனிப்பட்ட காரணத்திற்காக வேலையில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.

மாசசூசெட்ஸின் ஃபாக்ஸ்பரோவில் ஜில்லெட் ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கேமரா சுழன்றது. அப்போது, ஒரு ஜோடி பிரம்மாண்டமான திரையில் தெரிந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

‘அஸ்ட்ரோனமர்’, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரனுடன் இருந்த பெண், அஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்.

பிரபலமான இசை நிகழ்ச்சியை காண வந்த காதல் ஜோடி எதிர்பாராத விதமாய் வைரலான பிறகு, அலுவலக காதல், பணியிட உறவுகள் பற்றிய பேச்சு எல்லா இடங்களிலும் தொடங்கிவிட்டது.

By admin