• Wed. Jul 2nd, 2025

24×7 Live News

Apdin News

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் | அஸ்வின்

Byadmin

Jul 1, 2025


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.

இப்படி பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவார் என்பதை முன்பே அறிவித்தது தவறானது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றொரு முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி பும்ரா இல்லாமல் விளையாடினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “பும்ராவுக்கு நாம் சச்சின் மற்றும் கோலிக்கு இணையான மரியாதையை அளிக்கவேண்டும். ஆனால் நாம் அதை அளிப்பதில்லை. அவர் வெறும் பவுலர் என்பதற்கு மேல் உள்ளார். ஏனென்றால் அவர் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளார். நிறைய பேர் அவர் மேல் அன்பு வைத்துள்ளார்கள். அதில் நான் நம்பர் 1 ரசிகராக இருப்பேன். ஒருவேளை அவருடைய மனைவி நம்பர் 1 இடத்துக்கு என்னுடன் போட்டியிடலாம்” எனப் பேசியுள்ளார்.

By admin