• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

சந்திரயான்-4: இஸ்ரோ நிலவுக்கு அனுப்பும் விண்கலம் என்ன செய்யும்?

Byadmin

Sep 21, 2024


சந்திரயான் -4, இஸ்ரோ

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, கடந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான கட்டத்துக்கு நகர்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரயான் -4 திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக இறங்கியுள்ளது.

நிலவுக்கு சென்று அதன் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான் -4 ஆகும். இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

2040-ல் நிலவில் மனிதர்களை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை நோக்கிய அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது.

“சந்திரயான் -3 திட்டம் நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்குவது சாத்தியம் என்று உணர்த்தியது. நிலவுக்கு பாதுகாப்பாக சென்று திரும்புவதே அடுத்தக்கட்ட திட்டமாகும். சந்திரயான்3 ஐ விட சிக்கலான தொழில்நுட்பங்கள் கொண்டது இத்திட்டம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார். மனிதர்கள் இல்லாமல் ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் நிலவின் மண் மாதிரிகளை எடுத்து வர வேண்டும் என்பதால் சவால்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

By admin