• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

சபரிவர்மன்: ‘த.வெ.க ஆட்சியில் முதல் காவல் மரணம்’ – கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பில் என்ன நடந்தது?

Byadmin

Jul 15, 2026


கன்னியாகுமரி, காவல் மரணம், தவெக, நாகர்கோவில்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சபரிவர்மன்

”இதற்கு முன்பு அவன் மீது எந்த வழக்குகளும் இல்லை. ஒருமுறை கூட சிறைக்குப் போனதில்லை. அவனுக்கு யாருடனும் பகை இல்லை. மாற்றுத் திறனாளியான அவனுக்குப் பிறவியிலேயே வலது கை செயல்படவில்லை. யாராவது அடித்தாலும் வாங்கிக் கொள்வான்”

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தபோது உயிரிழந்த சபரிவர்மனின் சகோதரி பிபிசி தமிழிடம் வேதனையோடு இவ்வாறு கூறினார்.

கைதி உயிரிழந்த விவகாரத்தில் மூன்று சிறைக் காவலர்களும், 8 சிறை கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கைதியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் பொதுமக்களும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘த.வெ.க ஆட்சியின் முதல் காவல் மரணம் இது’ என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

கன்னியாகுமரி, ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன், தனது வீட்டை ஒட்டியுள்ள இடத்தில் பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.

By admin