5
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ருத்ரா சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வரும் இளைஞராக- கதையின் நாயகனாக – நடித்திருக்கும் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் ஜீ வி பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ திரைப்படத்தில் ருத்ரா, ப்ரீத்தி அஸ்ராணி, கருணாகரன், சேத்தன், தேவதர்ஷினி, அனுபமா குமார், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லூக் ஜோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.
இன்றைய இளம் தலைமுறையினர் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய வாழ்வாதாரமாக திகழும் சமூக வலைதளங்கள் குறித்து பேசும் இந்த திரைப்படத்தை ஏ பி இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சஞ்சய் அர்ஜுன் தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்.. இன்றைய இளம் தலைமுறையினரை ஆதிக்கம் செலுத்தி வரும் ரீல்ஸ் ஷார்ட்ஸ் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இருப்பதால்… இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.