19
இங்கிலாந்தில் இவ்வாண்டு ஒகஸ்ட் மாதம் முதல், உள்ளூர் பஸ்களில் 05 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என நிதி அமைச்சர் அறிவிக்கவுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், சுமார் 100 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான புதிய இலவசப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், பிஸ்கட், உலர்ந்த பழங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான சுங்க வரிகளை தற்காலிகமாக நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கும் நோக்கில், பல்பொருள் அங்காடிகள் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டம்
எனினும், முட்டை மற்றும் பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டாய விலை வரம்பு விதிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில், புதிய கட்டுப்பாடுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, வரி மற்றும் ஒழுங்குமுறைச் சுமைகளை குறைப்பதே பொருளாதாரத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என Marks & Spencer நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார்.