• Thu. May 21st, 2026

24×7 Live News

Apdin News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை யார், எதற்காக தொடங்கினார்? முழு பின்னணி

Byadmin

May 21, 2026


அபிஜீத் திப்கே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், @abhijeet_dipke

படக்குறிப்பு, அபிஜீத் திப்கே, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற இணையவழி இயக்கத்தின் நிறுவனர் ஆவார்

இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற சமூக ஊடக பிரசாரம் பெரும் விவாதப் பொருளாக மாறி வைரலாகிறது.

இருப்பினும், நாட்டின் இளைஞர்கள் பற்றிய தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியுள்ளார்.

நீதிபதி சூர்யகாந்தின் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நையாண்டிப் பிரசாரத்தை பலரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) உள்ளது.

இந்தப் பெயரில் இணையத்தில் ஓர் இணையதளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இது 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, இக்கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஜேபி (CJP) என்றால் என்ன? இது எவ்வாறு தொடங்கியது?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணையதளத்தில் அதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அவரது பெயர் அபிஜித் தீப்கே.

By admin