• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

சம்பா பயிரை அறுவடை வரை காப்பாற்றத் தேவையான நீர் கிடைக்குமா? டெல்டா விவசாயிகள் கவலை

Byadmin

Sep 25, 2026


மேட்டூர் அணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே தாமதமாகத் தொடங்கிய சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு இப்போது முக்கியமான கேள்வி, தண்ணீர் திறக்கப்படுமா என்பது மட்டுமல்ல; தொடங்கிய சம்பா பயிரை அறுவடை வரை காப்பாற்றத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்பதுதான்.

உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

கர்நாடகா காவிரி நீரை உரிய அளவில் திறக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 9 முதல் 23-ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் தினமும் 6,000 கனஅடி நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவின்படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

By admin