• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து: தலைமை தேர்தல் ஆணையருடன் முரண்பட்ட 2 ஆணையர்கள் யார்?

Byadmin

Sep 25, 2026


மார்ச் 15, 2026 அன்று புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தாண்டு மார்ச் 15ஆம் தேதி புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கருத்து வேறுபாடு கொண்டதிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன; ஆனால், ‘துடிப்பான ஜனநாயகம்’ ஒன்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று என்று ஆளும் பாஜக தரப்பு கூறுகிறது.

இந்த விவகாரம் முழுவதுமே, எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் படியே மேற்கொள்ளப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர்களுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது ஒன்றும் புதியதல்ல; ஆனால், இந்த முறை இது இதுவரை இல்லாத அளவுக்குப் பேசப்படும் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடைமுறையானது இந்த மூன்று தேர்தல் ஆணையர்களின் மேற்பார்வையில் தான் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், முன்னணி ஆங்கில நாளிதழான ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி கடந்த 10 மாதங்களில் முறையான பதிவுகளில் குறைந்தது 14 முறை தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பல முடிவுகளும் உத்தரவுகளும் தங்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகவும், ஒரு நாளில் இது போன்ற நான்கு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

By admin