• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் எதிரொலித்த தேர்தல் ஆணைய விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Sep 25, 2026


2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி.

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய தேர்தல் ஆணையத்துக்குள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியலில் இதுகுறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் தான் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் மாநில அரசியல் சூழலிலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எனினும், ஆளும் கட்சியான தவெகவிலிருந்து அதிகாரபூர்வ கருத்து வெளியாகவில்லை.

“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன; ஆனால், ‘துடிப்பான ஜனநாயகம்’ ஒன்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று” என்று ஆளும் பாஜக தரப்பு கூறுகிறது.

தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது முடிவெடுக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

By admin