தமிழ் சினிமாவின் பொக்ஸ் ஓபீஸ் வசூல் நாயகனாக புது அடையாளத்தை பெற்றிருக்கும் நடிகர் சூரி- பான் இந்திய அளவிலான பொக்ஸ் ஓபீஸ் வசூல் நாயகனாக மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும் நடிகர் நிவின்பாலி, முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நிவின்பாலி- அஞ்சலி- சூரி- ஆகியோர் நடித்திருக்கிறார்கள். என். கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் படைப்பாளுமைகளான வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்த முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சியில் நிவின்பாலி- சூரி- அஞ்சலி- ஆகியோர்களின் திரை தோற்றங்கள்- உரையாடல்கள், பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.
The post நடிகர்கள் நிவின்பாலி – சூரி இணைந்து தோன்றும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.