• Thu. Sep 24th, 2026

24×7 Live News

Apdin News

“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அரசுத் தரப்பு சாட்சியாக வேண்டும்”: ராகுல் காந்தி

Byadmin

Sep 24, 2026


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “அரசியலமைப்பு சீரழிக்கப்பட்டால், சட்டங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்; அமைப்புகளும் தங்களின் நோக்கத்தை இழந்துவிடும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஆங்கில நாளிதழான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புதன்கிழமை வெளியிட்ட புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆதாரங்களுடன் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுப்பி வருவதாகக் கூறிய ராகுல் காந்தி, தற்போது தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே முறைகேடுகள் தொடர்பாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, “ராகுல் காந்திக்கு அரசியல் அறிவு இல்லை” என விமர்சித்தார். “காங்கிரஸுக்கு எதிரான ‘ஆட்சி எதிர்ப்பு அலை’ எப்போதும் வலுவாகவே இருந்துள்ளது, ஆனால் எப்போது வெளிப்படையான தேர்தல்கள் நடக்கத் தொடங்கினவோ, அன்றிலிருந்து அவர்களால் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாம் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பிற நிகழ்வுகளைப் பட்டியலிட்டுப் பேசிய ராகுல் காந்தி, எந்தெந்த சந்தர்ப்பங்களில் தான் ‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தை எழுப்பினேன் என்பதையும் விவரித்தார்.

இந்திரா காந்தி தனது அரசியல் புகழின் உச்சத்தில் இருந்தபோதும்கூட தேர்தலில் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, சமீபத்திய பல தேர்தல்களில் ‘ஆட்சிக்கு எதிரான மனநிலை’ என்பதே காணாமல் போய்விட்டது போல் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.

By admin