0
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக அதிகாரியான கீதா கோபிநாத், எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை விட்டு வெளியேறி, மீண்டும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவார் என்று IMF ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கீதா கோபிநாத்துக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக பணியாற்ற இருக்கும் பணியாளரை IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா சரியான நேரத்தில் நியமிப்பார் என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கீதா கோபிநாத், 2019இல் தலைமைப் பொருளாதார நிபுணராக அந்தப் பொறுப்பில் பணியாற்றும் முதல் பெண்மணியாக நிதியத்தில் சேர்ந்தார்.
2022ஆம் ஆண்டு ஜனவரி இல் முதல் துணை நிர்வாக இயக்குநராக அவர் பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையிலேயே, 2025 ஓகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கீதா கோபிநாத்
இந்தியரான கீதா கோபிநாத், உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் ஆவார்.
அட்டகாசமான கல்வியறிவும் அறிவார்ந்த தலைமைப் பண்பும் கொண்டவர்.
பெரிய அளவில் சர்வதேச அனுபவமும் கொண்டவர் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்ட்டின் லகார்டே அவரைப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.