0
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ப்ரோமோ வீடியோ மிகவும் நகைச்சுவையாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ஏ.ஆர் முருகதாஸ், அனிருத் என் அனைவரும் லுங்கியுடன் வலம் வருகின்றனர். இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடல் வரும் ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.