• Fri. Jul 25th, 2025

24×7 Live News

Apdin News

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு: அப்ரூவர் ஆக விரும்பும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

Byadmin

Jul 24, 2025


சாத்தான்குளம், பென்னிக்ஸ், ஜெயராஜ், காவல்நிலைய மரணம், ஆய்வாளர் ஸ்ரீதர்

பட மூலாதாரம், Spl arrangement

படக்குறிப்பு, வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்ரீதர்

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் முதல் நபராக (A1) குற்றம் சுமத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறி உண்மையைக் கூற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

“இது வழக்கை இழுத்தடிப்பதற்கான நாடகம்” என ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்ரூவர் ஆக மாறுவதால் என்ன நடக்கும்? தண்டனை கிடைப்பதில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா?

2020 ஜூன் 19. கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் இது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொதுமுடக்கம் காரணமாக இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்ஸ் மற்றும் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

By admin