4
சுயாதீன இசை வீடியோ ஆல்பங்கள் மூலம் இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததுடன், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி தமிழ் திரையிசை உலகில் தனி முத்திரை பதித்த சாய் அபயங்கர், மீண்டும் ‘ரதிமா’ எனும் சுயாதீன இசை வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
சாய் அபயங்கரின் இசையில் வெளியான ஆறாவது சுயாதீன இசைப் பாடலான **‘ரதிமா’**வில் அவரும் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவும் இணைந்து நடித்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பின்னணி பாடகர் சாய் அபயங்கருடன், பின்னணி பாடகிகளான நர்கீஸ் தேஜி, அஸ்மா தேஜி மற்றும் சாய் ஸ்மிருதி ஆகியோரும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காதல் பிரிவை சோகமாக விவரிக்காமல், உற்சாகத்துடன் புதிய வகையிலான இசை வடிவத்தில் சாய் அபயங்கரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ‘ரதிமா’ பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக, பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது