• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளத்தில் திடீரென கரைபுரண்டு ஓடிய வெள்ளம்: அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள்

Byadmin

Aug 26, 2026


திபெத் எல்லையில் உள்ள நேபாள மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் உள்ள மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் ராணுவம்

நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை.

குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சியாஃப்ருபெசி என்ற பகுதியில் உள்ள வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்ட மக்கள் சொத்துகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வடகிழக்கில் திபெத் எல்லையில் இருந்து ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.

இந்த வெள்ளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆண்கள், ஒரு பெண் ஆவார்கள். நான்கு பேர் உடல்களும் திரிஷுலி ஆறு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பனி ஏரி உருகி வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்

இந்த வெள்ளம் கனமழையால் ஏற்படவில்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய பனிப்பாறை உருவானதாலோ அல்லது பழைய பனிப்பாறை ஒன்று உடைந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பனி ஏரி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், உறுதி செய்யப்படவில்லை.

தமிழகர்கள்

இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin