0
பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா இணைந்து பாரீஸுக்கு அருகில் டிராகன் பால் இசட் (Dragon Ball Z) பின்னணியிலான தீம் பார்க்கை உருவாக்க $7 பில்லியன் (€6 பில்லியன்) திட்டத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இத்திட்டத்துக்கான நிதியை, சவூதி அரேபியாவின் பொழுதுபோக்கு மற்றும் முதலீட்டுக் குழுமமான கித்தியா (Qiddiya) வழங்குகிறது.
இந்த தீம் பார்க் பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் வடமேற்கே உள்ள செர்கி-போன்டோயிஸ் (Cergy-Pontoise) பகுதிக்கு அருகில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 22,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது மூன்று தீம் பார்க்குகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பொழுதுபோக்கு மையத்தின் ஒரு பகுதியாக அமையும்.
இந்தத் திட்டம், அகிரா தொரியாமாவால் (Akira Toriyama) உருவாக்கப்பட்டு உலக அளவில் புகழ்பெற்ற ஜப்பானிய மங்கா மற்றும் அனிமேஷன் தொடரான ‘டிராகன் பால்’ (Dragon Ball) கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான பல விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதால், இது எப்போது திறக்கப்படும் என்ற தொடக்கத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.