• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுமா? ஆதரவும் எதிர்ப்பும்

Byadmin

Aug 26, 2026


பரந்தூர் விமான நிலையத் திட்டம்

பட மூலாதாரம், DIPR

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதலீட்டு வாய்ப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,” என, செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

இதற்கு விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “மக்கள் பாதிக்கப்படாமல் விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்.” எனக் கூறினார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் என்ற கருத்தை தொழில்துறையினர் முன்வைத்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று 110 விதியின்கீழ் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.

அவர் பேசும்போது, “புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் தேவைப்படும் இடம் விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும்.” எனக் கூறினார்.

By admin