• Tue. Nov 17th, 2026

24×7 Live News

Apdin News

சிஎஸ்கே அணியில் தோனிக்கு புதிய பொறுப்பு – ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு அறிவிப்பு

Byadmin

Nov 17, 2026


ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு: சிஎஸ்கே அணியில் தோனிக்கு புதிய பொறுப்பு

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சிஎஸ்கே ரசிகர்களால் ‘தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி ஐபிஎல்லுக்கு விடை கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கிலும் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்த அவரது ஓய்வு குறித்த அறிவிப்பை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கேவின் எக்ஸ் பக்கத்தில், ” வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வீரர். ஒரு புதிய பொறுப்பு. என்றென்றும் நீடிக்கும் பிணைப்பு. மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘ஆலோசகர்’ பொறுப்பை ஏற்கிறார். எண்ணற்ற வெற்றிகள், சவாலான காலங்கள் மற்றும் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் நினைவுகள் என, நமது பயணத்தின் தொடக்கத்திலிருந்தே எம்.எஸ். அதன் மையப்புள்ளியாக இருந்து வருகிறார்.

அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டுவது வரை, ‘தல’ எப்போதும் நமது அடையாளத்தின் ஒரு அங்கமாகவே இருப்பார். சென்னை எப்போதும் அவருக்கு இல்லமாகவே இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் கூறியது என்ன?

தோனி புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் கூறியுள்ளார்.

“எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், தோல்விகள், பின்னடைவுகள் என அனைத்திலும் நாங்கள் ஒருவருக்கொருவர் துணையாகப் பயணித்து வளர்ந்திருக்கிறோம். எங்களுடைய உறவு இவ்வளவு வலுவாக இருப்பதற்கு ஒரே காரணம்தான். ஒருவர் மற்றொருவரின் நோக்கத்தின் மீது ஒருபோதும் சந்தேகம் கொள்வதில்லை. அந்த நம்பிக்கையே இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கியது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin