• Thu. Sep 24th, 2026

24×7 Live News

Apdin News

சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு தோனி நட்பு எவ்வாறு உதவும்? ஓராண்டு ஒப்பந்தம் தரும் நெருக்கடி

Byadmin

Sep 24, 2026


சிஎஸ்கே புதிய பயிற்சியாளர் ஜாகீர் கானுக்கு தோனியுடனான நட்பு எவ்வாறு உதவும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோனி மற்றும் ஜாகீர் கான் (கோப்புப் படம்)

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முதல் முறையாக ஒரு ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார் ஜாகீர் கான். அவர் இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக, அந்த நிறுவன அணிகளின் உலகளாவிய தலைவராக, லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவருடைய ஒப்பந்தம் ஒரு ஆண்டுக்கானது.

இந்த முடிவு சூப்பர் கிங்ஸ் அணியில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது, ஜாகீர் கானால் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன? அனைத்தையும் அலசுவோம்.

சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய மாற்றம்

தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபிளெமிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபிளெமிங்

ஐபிஎல் அணிகளில் நிலைத்தன்மையை விரும்பும் அணியாக அறியப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தத் தொடர் தொடங்கியது முதல் இதுவரையிலும் 2 தலைமைப் பயிற்சியாளர்களே அந்த அணியை வழிநடத்தியிருக்கிறார்கள்.

2008 முதல் சீசனில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எரிக் சிம்மன்ஸ் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த சீசனில் சிஎஸ்கே அணியின் அங்கமாக இருந்த ஃபிளெமிங், 2009 சீசனுக்கு முன்பாக ஓய்வு பெற்றுவிட்டு, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது முதல் அவரே அந்தப் பொறுப்பை வகித்துவந்தார்.

By admin