• Mon. Jul 28th, 2025

24×7 Live News

Apdin News

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார் | cm stalin discharge home after completing treatment

Byadmin

Jul 28, 2025


சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர்.

தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆஞ்​சியோ பரிசோதனை​யில் வேறு எந்த பாதிப்​பும் இல்லை என்​பது உறு​தி​யானது. முதல்​வரின் உடல்​நிலையை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வந்​தனர். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​வாறு அரசு அலு​வல்​களை முதல்​வர் மேற்​கொண்டு வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று மாலை சுமார் 6 மணி​யள​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார். மருத்​து​வ​மனை வளாகத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் துரை​முரு​கன் உள்​ளிட்ட பலர் முதல்​வரை வரவேற்​றனர். மருத்​து​வ​மனை​யில் இருந்து தேனாம்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலையில் உள்ள இல்​லத்​துக்​குச் சென்ற முதல்​வரை, சாலை​யின் இரு​புற​மும் திரண்டு இருந்த பொது​மக்​கள், கட்​சி​யினர் வரவேற்​றனர்.

இதைத்தொடர்ந்து முதல்​வர் ஸ்​டா​லின் வெளியிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: நலம் பெற்று வீடு திரும்​பினேன். மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த போது அக்​கறை​யுடன் விசா​ரித்​து, நலம் பெற வாழ்த்​திய அனைத்து அரசி​யல் இயக்க தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், நீதிப​தி​கள், அரசு அதி​காரி​கள், திரை கலைஞர்​கள் என் உயிரோடு கலந்​திருக்​கும் அன்பு உடன்​பிறப்​பு​கள் உள்​ளிட்ட தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது நெஞ்​சார்ந்த நன்​றி.

மருத்​து​வ​மனை​யில் சிறப்​பான சிகிச்சை அளித்​து, நான் விரைந்து நலம்​பெற உறு​துணை​யாய் இருந்த மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மீண்​டும் அன்​பும், நன்​றி​யும். உங்​களுக்​காக உழைப்பை வழங்​கும் என் கடமையை என்​றும் தொடர்​வேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

முன்​ன​தாக, அப்​போலோ மருத்​து​வ​மனை மருத்​துவ சேவை​கள் இயக்​குநர் மருத்​து​வர் பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “மருத்​து​வர் செங்​குட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழு​மை​யாக குணமடைந்த முதல்​வர் இல்​லம் திரும்​பு​கிறார். முதல்​வர் நலமாக இருக்​கிறார். 3 நாள் இடைவெளிக்கு பின்​னர் வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​று தெரிவித்​துள்​ளார்.



a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/8267744/" data-a2a-title="சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார் | cm stalin discharge home after completing treatment">

By admin