• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

சிங்கப்பூர்: உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவருக்கு 60% ஊதிய உயர்வு – ஆதரவும் எதிர்ப்பும்

Byadmin

Sep 9, 2026


சிங்கப்பூர் பிரதமருக்கு ஊதிய உயர்வு, உலகிலேயே மிக அதிக ஊதியம், அமெரிக்க அதிபரை விட அதிகம்

பட மூலாதாரம், Getty Images

உலகின் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமரின் ஊதியம் உட்பட, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிற உயர் பதவியில் உள்ளவர்களின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தப் போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

இதனால், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியத்தில் 1.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) உயர்வு ஏற்படவுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

சிறந்த திறமையாளர்களை ஈர்க்க அமைச்சர்களின் ஊதியத்தை உயர்த்துவது அவசியம் என்று வோங் கூறினார். அமைச்சர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவது ஊழலைத் தடுக்கும் என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ஆனால், வேலைப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்துக் கவலை நிலவும் சிங்கப்பூரில், அரசின் இந்த நடவடிக்கை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, உலகின் மிக அதிக ஊதியம் பெறும் தலைவராக வோங் திகழ்கிறார்.

By admin