• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

சிஜேபி போராட்டத்தில் படுகாயமடைந்த 21 வயது மாணவி – குடும்பத்தினர் கூறியது என்ன?

Byadmin

Jul 22, 2026


சிஜேபி போராட்டத்தில் படுகாயமடைந்த 21 வயது மாணவி - குடும்பத்தினர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிஜேபி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது (கோப்புப் படம்).

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் 21 வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற போராட்டப் பேரணியின் போது, காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு ராம் மனோகர் லோகியா மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது காயமடைந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், 70-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த மொத்தம் 118 பேர் இந்தப் போராட்டத்தின் போது காயமடைந்ததாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தனர்.

By admin