• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

சிஜேபி போராட்டம், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?

Byadmin

Jul 26, 2026


தங்களது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று அபிஜித் தீப்கே கூறியுள்ளார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தங்களது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று அபிஜித் தீப்கே கூறியுள்ளார்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் ஆலோசனையின் பேரில், தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஜந்தர் மந்தரில் மேடையில் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “நாம் சாதித்துக் காட்டிவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துவிட்டார்” என்றார்.

மேலும், “தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா நடந்துவிட்டது, நீங்கள் அச்சமின்றி அரசின் முன் பணியாமல் இருந்தால், எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் அவர்களை ராஜிநாமா செய்ய வைக்க நம்மால் முடியும் என்பதற்கு இதுவே சாட்சி” என்று அவர் கூறினார்.

அபிஜித் தீப்கே என்ன கூறினார்?

ஜந்தர் மந்தர் மேடையில் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “இது ஜனநாயகம் என்பதால் பயப்படத் தேவையில்லை. ஜனநாயகத்தில் பேசுவதற்கே பயம் ஏற்பட்டால் அது என்ன ஜனநாயகம்? நாம் குரல் எழுப்பினால் இவர்கள் வழிக்கு வருவார்கள், இவர்களை வழிக்குக் கொண்டு வந்து வைத்திருப்பது அவசியம். தங்களை அரசர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நம்மால்தான் அங்கு அமர்ந்திருக்கிறார்கள்” என்றார்.

By admin