• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

‘கரப்பான்பூச்சிகள்’ என அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே!

Byadmin

Jul 26, 2026


‘கரப்பான்பூச்சி’ சர்ச்சை

மே 15 அன்று வழக்கறிஞர் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, “பணியோ அல்லது வாழ்க்கையில் சரியான இடமோ இல்லாமல் சுற்றித் திரியும் ‘கரப்பான்பூச்சிகள்’ போன்ற இளைஞர்கள் பலர் உள்ளனர்” என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்து சர்ச்சையானது.

அடுத்த நாளே மே 16 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உதயமானது. அமெரிக்காவின் போஸ்டனில் படித்து வந்த அபிஜித் தீப்கே, இக்கருத்தை எதிர்த்து எக்ஸ் தளத்தில் ‘ரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நையாண்டியாக ஒரு இயக்கத்தை அறிவித்தார்.

சர்ச்சை வலுத்த நிலையில் , தாம் போலி சட்டப் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாக சூர்யகாந்த் விளக்கமளித்தார்.

சிஜேபி

ஆனால் அதற்குள் சிஜேபி கட்சிக்கு இணையத்தில் பாலோயர்கள் குவிந்தனர். இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களிலும் சிஜேபி கணக்கு உருவாகி குறுகிய காலத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கு இருந்த பாலோயர்களை கடந்து அதிக பாலோயர்களை பெற்றது சிஜேபி.

By admin