3
கொழும்பில் ‘சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா’வின் பிரமாண்ட திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், இந்த திறப்பு விழாவுக்கு போலி டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்காவின் நிர்வாகம் உத்தியோகபூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
இந்த திறப்பு விழா நிகழ்வில் தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். திறப்பு விழா தொடர்பாக டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
“உத்தியோகபூர்வமற்ற போலி டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏதேனும் துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள தங்கள் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகள் ஊடாக அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.