• Thu. Jul 9th, 2026

24×7 Live News

Apdin News

சிந்து நதிநீர் ஒப்பந்தம்: பாகிஸ்தான் ராணுவம் என்ன சொன்னது? ‘போரிட தயார்’ என பிலாவல் பூட்டோ ஆவேசம்

Byadmin

Jul 9, 2026


இந்தியா - பாகிஸ்தான், சிந்து நதிநீர் ஒப்பந்தம், அசிம் முனீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் படைப்பிரிவுத் தளபதிகளின் கூட்டத்திலும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது (கோப்புப் படம்).

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பற்றி பாகிஸ்தானில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் பெற்ற நீர் உரிமைகளைப் பாதுகாக்க ‘தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்’ பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாதுகாக்கப்படும் எனக் கூறியுள்ள பிலாவல் பூட்டோ சர்தாரி, பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் “எந்த சமரசமும் செய்துகொள்ள பாகிஸ்தான் தயாராக இல்லை” என்றும் தேவையென்றால் சண்டையிடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

By admin