டொனால்டு டிரம்ப்:
மோதலுக்கு அமைதியான மற்றும் நீடித்த தீர்வை எட்டுவதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்குத் திரும்புமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானிய தாக்குதல்கள் காரணமாக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், மற்றொரு இரவு தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது, போர் மீண்டும் மூளக்கூடும் என்ற கவலைகளை தூண்டியுள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகளைத் தாக்குவதாகவும், எண்ணெய் உற்பத்தி மையமான கார்க் தீவை கைப்பற்றுவதாகவும் டிரம்ப் தனது அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தினார்.