• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளின் தமிழாசிரியர்கள் 1,200 பேருக்கு பயிற்சி முகாம்: அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார் | Training camp forTamil teachers from CBSE and ICSE schools

Byadmin

Jul 8, 2025


சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட தனி​யார் பள்​ளி​களின் தமிழாசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்​டம், 2006-ம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்​டது. இச்​சட்​டம், தமிழகத்​தில் உள்ள அனைத்​து​வகை பள்​ளி​களி​லும், தமிழ் மொழியை கட்​டாய பாட​மாகக் கற்​பிக்க வகை செய்​கிறது. இந்​நிலை​யில், தமிழ் கற்​றல் சட்​டத்தை முழு​மை​யாக நடை​முறைப்​படுத்​தும் வகை​யிலும், சிபிஎஸ்இ உள்​ளிட்ட இதர வாரி​யங்​களின் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​கள் தமிழை எளிமை​யாக​வும், விருப்​ப​மாக​வும் படிக்​க​வும் அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட பள்​ளி​களில் பணிபுரி​யும் 6 ஆயிரம் தமிழாசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் பயிற்சி அளிக்​கப்பட இருக்​கிறது.

அந்த வகை​யில், முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இந்த பயிற்சி முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடங்கி வைத்​தார்.

அவர் பேசி​ய​தாவது: இந்த முகாமில், தமிழாசிரியர்​களின் கற்​பித்​தல் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் சிறந்த தமிழாசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​களைக் கொண்டு இலக்​கணம், பாடப்​பொருள், செய்​யுள், உரைநடை, மதிப்​பீடு ஆகிய 5 பகு​தி​களாக பயிற்சி அளிக்​கப்​படும். தமிழகத்​தில் உள்ள அரசு பள்​ளி​களின் மாணவர்​கள், ஆசிரியர்​கள் மட்​டுமல்ல தனி​யார் பள்ளி மாணவர்​களும், ஆசிரியர்​களும் எங்​கள் குடும்​பம்​தான்.

ஒவ்​வொரு கால​கட்​டத்​தி​லும் நாம் நம்மை புதுப்​பித்​துக் கொள்ள வேண்​டியது அவசி​யாகிறது. நமது மாணவர்​கள் நம்​மை​விட செயற்கை நுண்​ணறி​வு, சாட் ஜிபிடி​யிடம் தான் அதி​கம் கேட்​கின்​றனர். ஆனாலும், எத்​தனை தொழில்​நுட்​பங்​கள் வந்​தா​லும் அவை ஆசிரியர்​கள் வகுப்​பறை​யில் பாடம் நடத்​து​வதற்கு இணை​யாக இருக்​கவே முடி​யாது. ஒரு மனிதன் இன்​னொரு மனிதனின் உணர்​வு​களைப் புரிந்​து​கொள்ள தொழில்​நுட்​பம் பயன்​ப​டாது.

தமிழ் நமது அடை​யாளம்: தமிழர்​கள் சுமார் 5,300 ஆண்​டு​களுக்கு முன்பே இரும்பை பயன்​படுத்​தி​யுள்​ளனர். அமெரிக்​கா​வின் ஃபுளோரிடா மாகாணத்​தில் உள்ள ஆய்​வகம் தமிழினத்​தின் பெரு​மையை எடுத்​துச் சொல்​கிறது. இதை நாம் அறிந்​தால் மட்​டும் போதாது. அதை மாணவர்​களிட​மும் எடுத்​துச்​செல்ல வேண்​டும். நமது மொழி​யின் பெரு​மையை உயர்த்​திப் பிடிக்க வேண்​டும். தமிழ் நமது அடை​யாளம்; ஆங்​கிலம் நமக்​கான வாய்ப்பு என்​பதை கருத்​தில் கொண்டு தமிழில் நாம் முதலில் முழு​மை​யாக உள்​வாங்​கிக் கொள்​வோம். இவ்​வாறு பேசி​னார். பயிற்சி முகாம் தொடக்க விழா​வில், தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநர் பெ.குப்​பு​சாமி, இணை இயக்​குநர் எஸ்​.சுகன்​யா, மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் துணைத் தலை​வர்​ முத்​துக்​கு​மார்​ உட்​பட பலர்​ பங்​கேற்​றனர்​.



By admin