4
சிரியாவில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இதற்காக ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சிரியாவில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேலிய இராணுவமும் திடீர் தாக்குதல் நடத்தியது.
தொடர்புடைய செய்தி : சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
இந்நிலையில், சிரியாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சண்டைநிறுத்தத்திற்குக் கடப்பாடு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புகளும் அவற்றின் பங்கை ஆற்றவேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தினார்.
அதேவேளை, அமெரிக்காவின் அழைப்புக்கு இணங்கி, தென்பகுதியிலிருந்து இராணுவ வீரர்களை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக சிரியாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.