2
அசாத் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முடிவுகள் இடைநிறுத்தப்பட்ட ஏழு மாதங்களுக்கும் மேலாக, சிரிய புகலிடக் கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
“துல்லியமான மற்றும் நன்கு நிரூபிக்கப்பட்ட தீர்மானங்களை எடுக்க போதுமான தகவல்கள் கிடைத்தவுடன், உள்துறை அலுவலகம் இடைநிறுத்தத்தை நீக்க உழைத்துள்ளது” என்று புகலிட அமைச்சர் டேம் ஏஞ்சலா ஈகிள் கூறினார்.
கோரிக்கைகள் இப்போது செயல்படுத்தப்படலாம் என்றும், சிரியாவிற்குத் திரும்புதல்கள் இதற்கு இணங்க நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்தில் வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்கெனவே இந்த ஆண்டு தானாக முன்வந்து சிரியாவிற்குத் திரும்பியுள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் இப்போது திரும்புவதற்கான வாய்ப்புள்ளது என பிபிசி சுட்டிக்காட்டுகிறது.
பல வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இஸ்லாமிய போராளிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர் தாக்குதலால் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டிசெம்பர் மாதம் சிரிய புகலிடம் மற்றும் நிரந்தரக் குடியேற்றக் கோரிக்கைகள் குறித்த முடிவுகளை இங்கிலாந்து இடைநிறுத்தியது.
இந்த நடவடிக்கை 7,000க்கும் மேற்பட்ட சிரியர்களை புகலிடம் கோரிக்கை குறித்த முடிவுக்காகக் காத்திருக்க வைத்தது.
இவர்களில் பெரும்பாலோர் ஹோட்டல்கள் போன்ற அரசாங்க நிதியுதவியுடன் கூடிய தங்குமிடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்த இடைநிறுத்தம் ஏற்கெனவே அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட சிரியர்களுக்கும் பொருந்தும், மேலும், நிரந்தரக் குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கும் முன் ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமை ஆரம்பத்தில் வழங்கப்பட்டது.
இந்த தற்காலிக அந்தஸ்து விடப்படுவது, மக்கள் வேலை அல்லது வீட்டுவசதியைப் பெறுவதை கடினமாக்குகிறது என்று பிரசாரகர்கள் கூறுகின்றனர்.