• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்திற்கு முதலிடம்

Byadmin

Sep 13, 2024


2024ஆம் ஆண்டுக்கான உலகில் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சுவிட்சர்லாந்து முதல் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாசார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் ஜப்பான், 3வது இடத்தில் அமெரிக்கா, 4வது இடத்தில் கனடா, 5வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன.

இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

ஆசியாவில் ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளே முதல் 25 இடங்களில் உள்ளன.

89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு பட்டியலில் இந்தியா 30ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது 3 இடங்கள் பின் நகர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 17ஆவது இடத்திலும் கட்டார் 25ஆவது இடத்திலும் உள்ளன.

By admin