திருநெல்வேலி: சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜக களமிறக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜககளமிறக்குகிறது. விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனை குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியிடவில்லை.
வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த அருண்ராஜுக்கு, தவெக கட்சியில் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் அப்போதைய அரசு வழக்குப்பதிவு செய்யவே தயங்கியது. ஆனால், அஜித்குமார் விவகாரத்தில் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.