0
நடிகர்கள் உதயா , அஜ்மல், யோகி பாபு ஆகியோர் கதையை வழிநடத்தி செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் ,கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி, முதன் முதலாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் , சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது .
இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை. இந்தப் படம் அனைவரையும் வசீகரிக்கும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்புடன் பட மாளிகைக்கு வந்தால் அவர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருக்கும். திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படியான சீட் எட்ஜ் திரில்லராக இருக்கும். ” என்றார்.