• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

சீனாவில் அஜித் தோவல்.. இந்தியா – சீனா எல்லையை நிர்ணயத்தில் உடன்பாடு. Ajit Doval in China.. Agreement on demarcation of India-China border

Byadmin

Aug 28, 2026


இந்தியா – சீனாவுக்கு இடையே எல்லை மோதல் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து சீனாவுடனான இந்தியாவின் உறவு பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.

முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்ப்பார் என கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எல்லை பிரச்சனை மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

By admin