• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

‘பனிப்பாறை உடைந்து விழுந்தது’: நேபாள ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி நீர்மட்டம் உயர்ந்ததாக புதிய தகவல்

Byadmin

Aug 28, 2026


லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகில் உடைந்து விழுந்த பனிப்பாறையே இந்தப் பேரழிவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகில் உடைந்து விழுந்த பனிப்பாறையே இந்தப் பேரழிவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல்

நேபாள – திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்கு உடைந்து விழுந்த பனிப்பாறையே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர். இது இமயமலைப் பனி பாறைகள் வேகமாக உருகுவது குறித்த கவலையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அதன் மூலம் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் வந்த தகவல்கள் பலரை நம்பச் செய்தன. இந்தப் பேரழிவில் குறைந்தது 177 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யூஎஸ்ஜிஎஸ்) பின்னர் வெளியிட்ட விளக்கத்தில், இந்தப் பேரிடர் “பனிப்பாறை சரிவு” காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவித்தது. பனிப்பாறை அல்லது அதன் ஒரு பகுதி உடைந்து சிதறுவதே பனிப்பாறை சரிவு என அழைக்கப்படுகிறது.

யூஎஸ்ஜிஎஸ் தரவுகள் மற்றும் இந்த நிகழ்வை ஆய்வு செய்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடைந்து விழுந்த பனிப்பாறை பள்ளத்தாக்கின் கீழ் பகுதியில் மோதிய தாக்கம் மிக வலிமையாக இருந்ததால், அது 5.2 என்ற அளவிலான நில அதிர்வாகப் பதிவாகியுள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகில் உள்ள நேபாளப் பனிப்பாறையின் கீழ் பகுதி உடைந்து சரிந்ததை தனது குழு கண்டறிந்ததாக டண்டி பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் டாக்டர் சைமன் குக் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin