• Fri. Aug 28th, 2026

24×7 Live News

Apdin News

காதல், காமம் இல்லாத திருமண வாழ்க்கை வாழும் பிளேட்டோனிக் பந்தம் பற்றி தெரியுமா?

Byadmin

Aug 28, 2026


ரெனி மற்றும் ஏப்ரல்

பட மூலாதாரம், Renee Wong

படக்குறிப்பு, ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.

    • எழுதியவர், ஜூலியா கிராஞ்சி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ரெனி வோங் மற்றும் ஏப்ரல் லீ இருவரும் தங்களுக்கு 12 வயது முதல் ஒருவரையொருவர் அறிவர். இந்த ஆண்டில் (2026) அவர்கள் தங்கள் இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள்: அவர்கள் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒரு வங்கிக் கணக்கைப் பராமரிக்கிறார்கள், எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்துகொள்ளாத ஒரே விஷயம் அவர்களது படுக்கை மட்டுமே; அவர்கள் தங்களை ஒரு காதல் ஜோடியாகக் கருதிக் கொள்வதில்லை.

29 வயதான இந்த இரண்டு பெண்களின் கதை, உளவியலால் இன்னும் முழுமையாக ஆராயப்படாத ஒரு வகையான இணைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: அதுதான் பிளேட்டோனிக் ஜோடி (platonic couple).

“இன்னும் தோன்றவே செய்யாத ஒரு காதல் துணைக்காக, வாழ்க்கைத்துணை மற்றும் திருமணம் போன்ற அந்த மதிப்புமிக்க இடத்தை நாம் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? ஒருவேளை அப்படிப்பட்ட நபர் பின்னர் வந்தால் நல்வாய்ப்புதான், நாம் அதை அனுபவிக்கலாம். ஆனால், ஏற்கனவே என்னிடம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கும் நபர் என் கண்முன்னே இருக்கும்போது, இன்னும் வராத ஒருவருக்காக அந்த இடத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?” என்று ரெனி பிபிசியிடம் கூறுகிறார்; அவர் தனது மனைவியான ஏப்ரலைக் குறிப்பிடுகிறார்.

அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறவும் திட்டமிட்டுள்ளனர், ஆனால் வழக்கமான அர்த்தத்தில் அவர்கள் ஒரு காதல் ஜோடி அல்ல: அவர்களுக்கு இடையே காதலோ அல்லது பாலியல் ஈர்ப்போ இதுவரையிலும் இருந்ததில்லை, தற்போதும் இல்லை.

அவர்கள் இருவரும் ஆன்ம தோழிகள் (soulmates) என்று வர்ணித்துக் கொள்கிறார்கள்; எந்தவொரு காதலாலும் நிரப்ப முடியாத ஒரு இடத்தை ஒருவர் மற்றவரின் வாழ்க்கையில் பிடித்துள்ளனர்.

By admin