மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நாகா சமூகத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்போக்பி மாவட்டத்தில் குக்கி இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மகுய் அஷாங் மற்றும் தபாம்பா நாகா கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
தனியார் பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் தட்சோங்போ ரிங்காங்மாய், சவாங்கிணிங் கிராம நிர்வாகத் தலைவர் விசோபூ சாரேனமாய், எம். விஜுனமாய், அனில் விஜுனமாய் ஆகியோர் உயிரிழந்தனர். கெய்காமங் ரிங்காங்மாய் என்பவர் காயமடைந்தார்.
பலியான 5 பேரும் ‘லியாங்மை நாகா’ சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் சடலங்கள் அருகில் உள்ள சேனாபதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வர் ஒய். கேம்சந்த் சிங் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.