• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

சீனா: பெய்ஜிங் திட்டத்திற்கு குறுக்கே நிற்கும் மியான்மர் உள்நாட்டுப் போர் – என்ன நடக்கிறது?

Byadmin

Sep 21, 2024


சீன-மியான்மர் எல்லை: போரும் பொருளாதாரமும்

பட மூலாதாரம், Getty Images

“ஒரே கிராமம், இரு நாடுகள்”

இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை “மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்” கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது.

ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த வேலி நெல் வயல்களை ஊடுருவி, ஒருகாலத்தில் இணைந்திருந்த தெருக்களைப் பிரிக்கிறது.

By admin